- Advertisement -
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை, காஞ்சிபுரம், கோவை, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், இராணிப்பேட்டை என இந்த 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேசமயம், இந்த மாற்றம், ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்த சுழற்சி, தமிழகத்தின் மேற்கு பகுதிகளை நோக்கி நகருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -