Thursday, December 7, 2023 6:08 am

எதிர்நீச்சல் சீரியலில் கோபத்தில் கதிரை கன்னத்தில் அறைந்த ஈஸ்வரி ! அடுத்த ஆதி குணசேகரனாக களமிறங்கும் பிரபலம் !ப்ரோமோ அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘எதிர்நீச்சல்’ நல்ல ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறுகிறது. நாடகத்தை மசாலாப் படுத்தும் வகையில், நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் நடிகர் வேலு ராமமூர்த்தியை ஒரு புதிய பாதையில் இணைத்துள்ளனர். மற்ற பிரைம் டைம் டிவி சீரியல்களை விட டிஆர்பி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நிகழ்ச்சியில் அவர் விரைவில் இணைவார்.

ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எல்லோரும் எதிர்பார்த்த வகையில் கதிர் ஈஸ்வரியையும், அவருடைய குழந்தைகளையும் பற்றி தவறாக பேச கோபத்தில் ஈஸ்வரி கதிரின் கன்னத்தில் அறைந்து விடுகிறார். அதே நேரத்தில் தற்போது வெளியான ஸ்பெஷல் ப்ரோமோவில் குணசேகரன் வீட்டிற்கு வருவது போன்று காட்சிகள் இருக்கிறது. இந்த நிலைகள் இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு கிளப்பிய பிறகு கதிர், ஞானம், விசாலாட்சி என மூவரும் மொத்தமாக மாறி குணசேகரன் மீது இருக்கும் பாசத்தால் வீட்டு பெண்களை அடிமையாக நடத்துகின்றனர். அதே நேரத்தில் கடுமையான வார்த்தைகளாலும் திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் நந்தினி செய்து வந்த கேட்டரிங் பிசினஸ்சும் கதிருக்கு மட்டுமல்லாமல் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் இனி கேட்டரிங் பிசினஸ் நடத்தக் கூடாது என்று கதிர் பெரிய அளவில் சண்டை போட்டு பிரச்சனை செய்து நந்தினியின் போனை உடைத்து இருந்தார். அது மட்டுமல்லாமல் நந்தினியை கதிரும் விசாலாட்சியும் அடித்தும் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஈஸ்வரி காலேஜில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதும் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் இனி யாரும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று கதிர் மட்டுமல்லாமல் ஞானமும் வீட்டில் இருக்கும் பெண்களை மிரட்டி இருக்கிறார். அதே நேரத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் குணசேகரன் வீட்டிற்கு வரப் போகிறார் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர் இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி, “குணசேகரன் எங்கேயும் போகவில்லை. இங்கனகுள்ளையே சுத்திகிட்டு நம்மள வேவு பாத்துகிட்டு தான் இருக்காரு” என்று அழுதப்படியே பேசிக் கொண்டிருக்க, அதற்கு ஜனனி நாம இங்க வர வைக்கணும் என்று சொல்ல எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து தர்ஷன் எங்களாலதான அவர் போனார்னு அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்கீங்கல்ல நாங்களே போயி அவரை கூட்டிட்டு வர்றோம் என்று கதிரிடம் கேட்க, அதற்கு கதிர் தாடிக்காரன் எங்க அப்பாவா இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னீங்கல்ல என்று கத்தி பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி அவங்க பேசுனது ஆதங்கத்துல என்று சொல்ல, அதற்கு கதிர் அசிங்கமாக பேசுகிறார். அதில் கோபமான ஈஸ்வரி கதிரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார். அதைப் பார்த்த மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறது. விசாலாட்சி நெஞ்சில் கை வைத்து அய்யோ என்று கதறுகிறார். சக்தி இப்படித்தான் கொடுக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்க, நந்தினி ரேணுகா முகத்தில் சந்தோஷம் தெரிகிறது. இந்த அதிர்ச்சியில் கதிர் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக பிரமோ வெளியாகி இருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தனை நாட்களாக வீட்டில் ரொம்பவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கதிரை யாராவது அடிக்க மாட்டார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அது ஈஸ்வரி கையாலேயே அவருக்கு கிடைத்துவிட்டதை பார்த்ததும் ரசிகர்கள் இதைத்தான் நாங்கள் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம். கடைசியில் இப்பதான் இதை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். இப்படித்தான் போல்டாக இருக்க வேண்டும் என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அது போல வெளியான ஸ்பெஷல் ப்ரோமோவில் கூட குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வருவது போன்று காட்சிகள் இருக்கிறது. இதனால் கதிரை ஈஸ்வரி அடித்ததால் இனி கதிர் என்ன செய்யப் போகிறார். அதே நேரத்தில் வீட்டிற்கு வரும் குணசேகரன் இதற்கு என்ன மாதிரி பதிலடி கொடுக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. ஆனால் எது எப்படியோ இன்றைய எபிசோடில் கதிர் அடி வாங்கியதை பார்ப்பதற்காகவே மொத்த ரசிகர்களும் ஆஜராகி விடுவார்கள் என்பது தெரிகிறது.

இந்நிலையில் ஆதி குணசேகரன் கேரக்டருக்காகவே பலரும் அந்த சீரியலைப் பார்த்து வந்ததால் புதிய நடிகரைத் தேர்வு செய்வதில் தயாரிப்புத் தரப்பு ரொம்பவே யோசித்ததாகச் சொல்லப்பட்டது.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க, நடிகர் வேல ராமமூர்த்தி கமிட் ஆகியுள்ளார்.

‘எதிர்நீச்சல்’ தொடரின் ஆதி குணசேகரன் கேரக்டர் நடிகர் மாரிமுத்துக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. ஆனால் சமீபத்தில் அவர் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அடுத்து அந்த கேரக்டரில் அடுத்து நடிக்கவிருப்பது யார் என்கிற எதிர்பார்ப்பு சீரியல் ரசிகர்களிடம் இருந்து வந்தது. அந்தக் கேரக்டருக்காகவே பலரும் அந்த சீரியலைப் பார்த்து வந்ததால் புதிய நடிகரைத் தேர்வு செய்வதில் தயாரிப்புத் தரப்பு ரொம்பவே யோசித்ததாகச் சொல்லப்பட்டது. சினிமா, டிவியிலிருந்து பலரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் எழுதினார்கள். ராதாரவி, இளவரசு, ஆனந்தராஜ் தொடங்கிப் பல பெயர்களை ரசிகர்களே பரிந்துரை செய்தார்கள்.

ஆனால் ஆரம்பம் தொட்டே நடிகர் வேல ராமமூர்த்தியின் பெயர் பரிசீலனையில் இருந்தது. நாமும் இது தொடர்பாக அவரிடம் பேசிய போது, “கூப்பிட்டாங்க, இன்னும் முடிவு பண்ணலை” எனச் சொல்லியிருந்தார்.

இந்தப் பின்னணியில் தற்போது அவரையே இறுதி செய்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில தினங்களில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தியை நீங்கள் பார்க்கலாம்.

புதிய ப்ரோமோவில் ஜீவானந்தின் மகளை ஈஸ்வரி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நந்தினி ஈஸ்வரியிடம் பெண் கேட்டது பெரும் நாடகத்தை உருவாக்கியது. கிசுகிசு ஆலைகள், அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யக்கூடிய மற்றும் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய பொருத்தமான நடிகரை தயாரிப்பாளர்கள் தேடுவதாக தெரிவிக்கின்றனர்.
சக்தி ஜனனிக்கு எதிராகத் திரும்பத் தொடங்குகிறார் (அவரது மூத்த சகோதரர் குணசேகரனின் உணர்ச்சிகரமான மிரட்டல் காரணமாக) மேலும் அவரது குணாதிசயத்தையும் சந்தேகிக்கிறார் (கௌதம் உடனான அவரது உண்மையான நட்பின் அடிப்படையில்). இறுதியாக, ஜனனி சக்தியுடனான தனது உறவை முறித்துக் கொண்டு, ஒரு புதிய சுதந்திரமான வாழ்க்கையைத் தொடங்க குணசேகரனின் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் பட்டம்மாளின் (குணசேகரனின் பாட்டி) அறிவுரையைக் கேட்ட ஜனனி, தன் சக சகோதரிகள் சுதந்திரமாக இருக்க உதவுவதற்காக குணசேகரனின் வீட்டிற்குத் திரும்புகிறாள். சக்தி தன் தவறுகளை உணர ஆரம்பித்தான் ஆனால் ஜனனி அவனை ஒரு நல்ல நண்பனாக மட்டுமே ஏற்றுக்கொண்டாள். மூவருக்கும் என்ன நடக்கும், அவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகத் தங்கினாலும் அல்லது வெளியே வந்து சுதந்திரமான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்களா; மீதமுள்ள கதையை உருவாக்குகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்