Thursday, December 7, 2023 8:04 am

ஆட்டமே இனிமேல் தான் ! எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகனுக்கு பதிலாக களமிறங்கும் பக்கா வில்லன் நடிகர் ! இறுதியில் நடந்த மாற்றம் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எதிர்நீச்சல் யாரும் யூகிக்க முடியாத கதைக்களத்துடன் எதிர் நீச்சல் தொடர் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இல்லையென்றாலும்… அடுத்தடுத்த திருப்பங்களுடன் கதைக்களத்தை வலுவாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். மாரிமுத்துவின் மரணத்துக்குப் பிறகு அவருக்குப் பாத்திரம் யாரென்று இன்னும் தெரியாததால் 40 சதவீத சொத்துப் பிரச்னையும் தற்காலிகமாக ஓய்ந்துவிட்டது. ஆனால், நேற்று வெள்ளை அங்கி அணிந்தவர் என்று காட்டப்பட்டது… அடுத்த ஆதி குணசேகரா? அல்லது ஆதி பகவன் கதாபாத்திரமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இன்று… யாருடைய கால் என்ற சஸ்பென்ஸ் உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது கதிர், ஞானம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் முகம் சுளிக்கிற மாதிரியும், எரிச்சலாக மன அழுத்தத்தை கொடுக்கிறது என்று சிலர் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார்கள். இதற்கிடையில் அவ்வப்போது குணசேகரன் வருகிற மாதிரி காலை மட்டும் காட்டி வருவது, செருப்பை வைத்து குணசேகரனின் உணர்வை கொடுப்பது, போனில் பேசுவது மட்டுமே வைத்து நாடகத்தை கொண்டு வருகிறார்கள்.அதற்கு காரணம் அவர் இல்லாதது பலருக்கும் பேர் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. அத்துடன் யாரு குணசேகரன் கேரக்டருக்கு வந்தாலும் இவருக்கு ஈடாகாது என்று பலர் சொல்கிறார்கள். அதனால் கொஞ்ச நாள் இதே மாதிரி வைத்து குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து முகத்தை மறக்க வைத்து அதன் பின் புது ஆர்டிஸ்ட் கொண்டு வரலாம் என்று இயக்குனர் முடிவெடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் ஆதி குணசேகரன் கேரக்டருக்காகவே பலரும் அந்த சீரியலைப் பார்த்து வந்ததால் புதிய நடிகரைத் தேர்வு செய்வதில் தயாரிப்புத் தரப்பு ரொம்பவே யோசித்ததாகச் சொல்லப்பட்டது.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க, நடிகர் வேல ராமமூர்த்தி கமிட் ஆகியுள்ளார்.

‘எதிர்நீச்சல்’ தொடரின் ஆதி குணசேகரன் கேரக்டர் நடிகர் மாரிமுத்துக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. ஆனால் சமீபத்தில் அவர் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அடுத்து அந்த கேரக்டரில் அடுத்து நடிக்கவிருப்பது யார் என்கிற எதிர்பார்ப்பு சீரியல் ரசிகர்களிடம் இருந்து வந்தது. அந்தக் கேரக்டருக்காகவே பலரும் அந்த சீரியலைப் பார்த்து வந்ததால் புதிய நடிகரைத் தேர்வு செய்வதில் தயாரிப்புத் தரப்பு ரொம்பவே யோசித்ததாகச் சொல்லப்பட்டது. சினிமா, டிவியிலிருந்து பலரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் எழுதினார்கள். ராதாரவி, இளவரசு, ஆனந்தராஜ் தொடங்கிப் பல பெயர்களை ரசிகர்களே பரிந்துரை செய்தார்கள்.

ஆனால் ஆரம்பம் தொட்டே நடிகர் வேல ராமமூர்த்தியின் பெயர் பரிசீலனையில் இருந்தது. நாமும் இது தொடர்பாக அவரிடம் பேசிய போது, “கூப்பிட்டாங்க, இன்னும் முடிவு பண்ணலை” எனச் சொல்லியிருந்தார்.

இந்தப் பின்னணியில் தற்போது அவரையே இறுதி செய்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில தினங்களில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தியை நீங்கள் பார்க்கலாம்.

புதிய ப்ரோமோவில் ஜீவானந்தின் மகளை ஈஸ்வரி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நந்தினி ஈஸ்வரியிடம் பெண் கேட்டது பெரும் நாடகத்தை உருவாக்கியது. கிசுகிசு ஆலைகள், அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யக்கூடிய மற்றும் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய பொருத்தமான நடிகரை தயாரிப்பாளர்கள் தேடுவதாக தெரிவிக்கின்றனர்.

சன் டிவி வெளியிட்ட புதிய ப்ரோமோவில், தயாரிப்பாளர்கள் புதிய முகத்தை விரைவில் அறிமுகப்படுத்துவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது, அவர் முக்கிய எதிர்மறை முன்னணியில் காணப்படுவார். தங்களுக்கு பிடித்த மாரிமுத்துவின் இழப்பு குறித்து ரசிகர்கள் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளனர். சமீபத்திய டிராக்கால் எதிர்நீச்சலின் TRPகள் பாதிக்கப்படுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குணசேகரனைக் காட்டுகிறேன் என்று கதிரும் ஞானாவும் நேற்று கோவிலில் காத்திருக்க, மீண்டும் கதிர்-ஞானத்திடம் ஏதோ சொன்னார்கள். இதையடுத்து நந்தினி கையில் சாப்பாட்டு கிண்ணத்துடன் வீட்டில் நின்றுள்ளார். கதிர் சந்தேகத்துடன் உள்ளே வந்து நந்தினியிடம், “எங்கே போற?” நந்தினி எதையோ மழுங்கடித்தாள். உடனே அங்கு வரும் விசாலாக்ஷி நான் செய்வேன் என உண்மையை உடைக்கத் தோன்றுகிறது. இதனால் இன்றைய எபிசோடில் என்ன கலவரம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்