- Advertisement -
இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இலியோனோரா ஓர்டோலானி, உலகிலேயே முதல்முறையாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் தயாரித்துள்ளார். இந்த ஐஸ்கிரீம் சுவையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் , ஓர்டோலானி அவர்கள், பாலிஸ்டிரீன் பிளாஸ்டிக் என்ற மூலக்கூறுகளை வைத்து இந்த ஐஸ்கிரீம் தயாரித்துள்ளார். இந்த பிளாஸ்டிக் மூலக்கூறுகள், ஐஸ்கிரீமின் திரவத்தை உறைக்க உதவுகிறது. அதேசமயம், இந்த பிளாஸ்டிக் மூலக்கூறுகள் ஐஸ்கிரீமின் சுவை மற்றும் அமைப்பை மாற்றாது என்றார்.
மேலும், ஓர்டோலானி கண்டுபிடித்த இந்த முறை இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. ஆனால், இந்த முறை வெற்றிகரமாக இருந்தால், இது சுற்றுச்சூழலுக்கு ஒரு முக்கியமான பங்களிப்பாக இருக்கும். எனவே, இதை மக்கள் சாப்பிடுவதற்கு உகந்ததா என்பது குறித்து தற்போது ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
- Advertisement -