- Advertisement -
மணிப்பூரில் கடந்த 4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை நிலவி வரும் சூழலில், தற்போது 80 நாட்களுக்கு முன் காணாமல் போன 2 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, நீதிகேட்டு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் நடத்திய தடியடியில் 30 பேர் காயமடைந்தனர். மேலும், இங்கு மாணவர்களின் இறப்புக்கு நீதிகேட்டு இம்பால் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதால், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இணையச் சேவைக்குத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது
- Advertisement -