- Advertisement -
பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் இருசக்கர வாகனம் சாகசத்தில் ஈடுபட முயன்றபோது, விபத்தில் சிக்கியது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, இவர் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போது ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டது. அதில், அவரது ஜாமீன் மனுவை 2வது முறையாகக் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது
- Advertisement -