Thursday, December 7, 2023 5:16 am

எதிர் நீச்சல் சீரியலில் அடுத்த க ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் ! இயக்குநர் கூறிய உண்மை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிப்பவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வெள்ளை வேட்டி அணிந்த ஒருவர் காரில் இருந்து இறங்கி நடந்து செல்வது போன்ற காட்சிகளுடன் சீரியல் முடிந்தது.மாரிமுத்துவின் இறப்பைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் காலியாகவே இருந்து வருகின்றது. இதனால் அடுத்து ஆதி குணசேகரன் யார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் மாரிமுத்து குறித்துப் பல விடயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது அவரிடம் அதில் மாரிமுத்து சார் இல்லாத எதிர்நீச்சல் சீரியல் முதல் நாள் எப்படி இருந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் “அவர் இல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் 3,4 நாட்கள் உட்கார்ந்து இருக்கோம், ஆனால் யாருமே சரியா பேசல, அவர் இருந்தால் சத்தம் போட்டிட்டு ஜாலியா இருப்பார், இப்போ ரொம்ப சைலண்டாக சூட்டிங் நடந்திட்டு இருக்கு” என்றார்.

மேலும் ஒரு எபிசோட்டில் ஆதி குணசேகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுப் போய் விட்டார் என்பதும் அனைவரும் அழுதது நடிப்புக்காக அழல, நிஜமாகவே அழுதிட்டாங்கள், அவர் இல்லை என்பது எல்லாருக்குமே ஓர் வலி தான்” எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது “நாங்க recollection ஆக அவரைக் காட்டிற்றே இருக்கலாம், ஆனால் அவரை மறுபடி காட்டும் போது ஒரு மாதிரி மன அழுத்தமாக இருக்கு, ஒரு ரசனைக்குரிய விடயமாக இருக்குமான்னு தெரியல” எனவும் மிகவும் எமோஷனலாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு “அடுத்ததாக இந்த சீரியலின் கதைப்படி ஆதி குணசேகரன் தான் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக இல்லையா என எண்ணி தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திற மாதிரி காட்சிகள் எல்லாம் இருந்திச்சு, ஆனால் மாரிமுத்து அந்த டேட் சினிமாவிற்காக கொடுத்ததால் அந்தக் காட்சிகளை எடுக்க முடியாமல் போயிடிச்சு” எனவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் திருச்செல்வம். குணசேகரன், அண்ணன் மீண்டும் வில்லத்தனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குணசேகரனின் சகோதரர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக விசாலாக்ஷி கூறியிருந்தார். கடைசி நேரத்தில், எபிசோட் வெள்ளை வேட்டியில் ஒரு நபர் காரில் இருந்து இறங்குவதுடன் முடிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் குவிந்து வருகிறது.

நெட்டிசன் ஒருவர், “அங்கே நடக்கிற பாதத்தையும், அதில் செருப்பையும் பார்க்கும்போது, கால் கலர்ஃபுல்லாகத் தெரிகிறது. அதனால் அது வேல ராமமூர்த்தியாகவோ, பசுபதியாகவோ இருக்க வாய்ப்பில்லை. நடிகர் அழகம்பெருமாளாக இருக்கலாம்” என்றார். இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை காண இன்றைய அத்தியாயத்தில் பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்