- Advertisement -
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிகக் கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.
அதேசமயம், இந்தியாவிலிருந்து தென் மேற்கு பருவமழை வெளியேறத் தொடங்கியது என்றும், வருகின்ற அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
- Advertisement -