- Advertisement -
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று (செப்.25) காலையில் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளியதும், ‘கோவிந்தா’ கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மேலும், இந்த மகா ரத உற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் மறுஜென்மம் இருக்காது என்பது நம்பிக்கை. இதனால் 4 மாட வீதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
- Advertisement -