- Advertisement -
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே விளையாண்ட 2 ஒரு நாள் தொடரில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் வீரரான சுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாகூருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என பிசிசிஐ சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும், இந்த 3வது ODI போட்டியில் இந்தியாவின் உலகக் கோப்பைக்காகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அணி பங்கேற்கும் என்று ஏற்கெனவே அறிவித்ததையடுத்து, வருகின்ற செப். 27 ம் தேதி நடக்கும் இப்போட்டியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேசமயம், நடந்த முடிந்த 2 போட்டிகளிலும் ரோஹித், கோலி, பாண்ட்யா, சிராஜ் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது
- Advertisement -