- Advertisement -
குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில், அதில் சென்றுகொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனங்கள் கீழுள்ள ஆற்றில் மூழ்கின. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு ஆற்றில் விழுந்த 10 பேரை மீட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
அதேசமயம், இது சுமார் 413 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பாலம் என்றும், தடையை மீறி வாகனங்கள் சென்றதால் அதில் சென்றதால் விபத்து நடந்துள்ளதாக ஆட்சியர் கே.சி.சம்பத் தெரிவித்தார்.
- Advertisement -