இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் நிலையில், அடுத்த ஆண்டு (2024) டி20 உலகக்கோப்பை ஐசிசி நடத்தவுள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துகின்றன.
குறிப்பாக, அமெரிக்காவில் முதன் முறையாக ஐசிசி தொடர் நடக்கிறது. இதுகுறித்து, ஐசிசி தனது X தளத்தில் “அடுத்த ஆண்டு ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேசமயம், இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 20 அணிகள் இதில் களமிறங்குகிறது குறிப்பிடத்தக்கது
- Advertisement -