Thursday, December 7, 2023 9:30 am

லியோ படத்தின் மூலம் மாநாட்டுக்கு தயாராகும் தளபதி விஜய் ! தளபதி போடும் புதிய கணக்கு

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மூன்று மொழிகளிலும் மூன்று நாட்களில் மூன்று போஸ்டர்கள்: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், லோகேஷ் கனகராஜ் மற்றும் குழுவினர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் சலசலப்பையும், உற்சாகத்தையும் வானளாவ வைக்கப் போவதாகத் தெரிகிறது. .சமீபத்தில்தான் லியோ படத்தை முழுவதுமாக விஜய் பார்த்ததாக செய்திகள் வெளிவந்தது. அக்டோபர் 19 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது. முதல் வாரத்தில் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் நடக்க இருக்கிறது.

அந்த இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்த்துதான் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திய பிறகு நடக்கும் இசை வெளியீட்டு விழா என்பதால் விழாவில் எந்தமாதிரியான ஒரு பேச்சை பேசுவார் என்று காத்திருக்கிறார்கள்.அதே சமயம் நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருப்பதால் ஒரு 6000 பேர் மட்டும் பங்குக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வழக்கம் போல் பத்திரிக்கை அன்பர்களுக்கு அனுமதி இல்லையாம். ஆனால் இந்த விழாவை வேறு மேடையாக மாற்ற விஜய் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அதாவது தமிழ் நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் தலா 20 பேர் என டிக்கெட் விற்பனைசெய்யப் போகிறார்களாம். அதே சமயம் விஜய் மக்கள் இயக்கத்தில் வெவ்வேறு அணிகள் இருக்கின்றனர். அந்த அணிகளில் இருந்து குறிப்பிட்ட சில பேருக்கு அனுமதி கொடுக்கப்பட இருக்கிறதாம்.

இதிலேயே 5000 பேர் வந்து விட்டனர். மீதமுள்ள 1000 பேர்தான் லியோ படத்தில் நடித்த கலைஞர்கள் என கூறுகிறார்கள். ஆகவே இது ஒரு பெரிய மாநாடு போல் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். இப்படி மக்கள் இயக்கம் சார்பாக அழைத்து வந்த ரசிகர்களுக்கு விஜய் ஏமாற்றம் கொடுக்காமல் இருந்தால் சரி என்று சொல்லப்படுகிறது.ஏனெனில் வருபவர்கள் எல்லாருமே விஜய் அரசியல் குறித்து பேசுவார் என்ற நம்பிக்கையில் தான் வருவார்கள். ஆனால் விழாவை நடத்தப் போறது சன் டிவி. அவர்கள் இருக்கும் போது எப்படி விஜய் அரசியல் பேச முடியும்? அதனால் இவ்ளோ பெரிய கூட்டத்தை கூட்டி விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்