Sunday, February 25, 2024 4:52 pm

5C கொண்ட ஆட்சிதான் பாஜக ஆட்சி : ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ ஆடியோவில் தமிழக முதல்வர் பரபரப்பு உரை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தலைப்பின் கீழ் ஆடியோ பதிவு மூலம் தமிழ்நாடு மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் உரையாடி வருகிறார். அண்மையில் அவரது முதல் ஆடியோ உரை வெளியான நிலையில், தற்போது 2வது உரை இன்று காலை 7 மணிக்கு வெளியானது. இந்த ஆடியோவில், ‘பாஜக ஆட்சியில் இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்துள்ளனர்? எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ இந்தியா எப்படி இருக்கும்?’ என்பதைப் பற்றிப் பேசியுள்ளார்.

அதில், ”வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம், இந்தியாவை மீட்டெடுப்போம் எனத் தனது உரையை ஆரம்பித்த பின், 2014, 2019ம் ஆண்டு ஏமாந்ததை போல 2024-ம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது. மேலும், இந்த INDIA கூட்டணியைப் பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி எனக் குற்றம்சாட்டும் பிரதமர் மோடி, உங்கள் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையைப் படித்துப் பார்த்தீர்களா? இது தொடர்பாகச் சிறப்புக் கூட்டத்தில் விவாதித்தீர்களா அல்லது பதில் அளித்தீர்களா? எனச் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அவர் ” ஒன்றிய பாஜக அரசு, எல்லா திட்டங்களுக்கும் வாய்க்குள் நுழையாத பெயராகப் பார்த்து வைப்பார்கள், அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என யாராலும் கண்டுபிடிக்க முடியாது” எனப் பரபரப்பு உரையாற்றினார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்