- Advertisement -
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்.15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கி வைத்து 1.06 கோடி பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் பயனாளர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.
அதில், “இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை. உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -