- Advertisement -
இயக்குநர் பி.வாசு இயக்கி, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்துக்கு தற்போது U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக சற்றுமுன் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, லைகா நிறுவனம் தனது X தளத்தில், “உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தயாராகுங்கள். இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள்” எனக் கூறியுள்ளது.
மேலும், இப்படம் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் சந்திரமுகி 2. இப்படம் வருகின்ற செப்.28 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- Advertisement -