- Advertisement -
சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் சர்ச்சையானது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்ற விசாரணையில், ‘அரசின் பிரதிநிதியான அமைச்சர், வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கிறார்’ என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதிபதி அவர்கள், இந்த கருத்துக்குப் பதிலளிக்க அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
- Advertisement -