- Advertisement -
வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பெரியார், மணியம்மை குறித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அதில், அவர் “கட்சி பணிக்காக மணியம்மையைப் பெரியார் அழைத்துச் சென்றார் என்பதற்குப் பதிலாகக் கூட்டிக் கொண்டு போனார் என்று பேசிவிட்டேன்” என்றார்.
மேலும், அவர் ” தற்போது இந்த இரு வார்த்தைகளுக்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன். இது திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ள வீரமணிக்கு வருத்தம் தந்திருப்பதாகச் செய்தி வெளி வந்ததையடுத்து இவ்வாறு தனது வருத்தத்தைத் தெரிவிப்பதாக” கூறியுள்ளார்.
- Advertisement -