- Advertisement -
மணிப்பூரில் கடந்த 4 மாதத்திற்கு மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே பயங்கர வன்முறை வெடித்தது. இதனால், ஒன்றிய அரசு ராணுவப்படையையும் மற்றும் போலீஸும் குவித்தது. இந்நிலையில், தற்போது மணிப்பூரில் கிராமத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை போலீசார் திடீரென கைது செய்ததையடுத்து, 5 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள் முன்பு முறையில்லாமல் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், போராட்டம் செய்த மக்களைக் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி போலீசார் கலைத்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இந்த 5 பேரும், காவல்துறை சீருடையைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்டவைகளின் அடிப்படையில் கைது செய்ததாக போலீஸ் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது
- Advertisement -