- Advertisement -
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுக் கூட்டம் இன்று (செப் .22) நடைபெற்றது. இதில், திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், ‘விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம்’ உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ” இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தால் பயன்பெற்ற பெண்கள் எத்தகைய மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது” என உரையாற்றினார்.
- Advertisement -