- Advertisement -
விசாகப்பட்டினம் கேந்திர வித்யாலயா பள்ளியில் போலி சான்றிதழ்கள் மூலம் மாணவர் சேர்க்கை நடப்பதாக அரசுக்குத் தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து அங்குச் சோதனை நடத்தியபோது, ஒன்றிய அரசு சார்பாக வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெற்றோருடன் சேர்ந்து போலியாகத் தயாரித்து மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும், இதில் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு சுமார் 193 மாணவர்கள் விதி மீறிச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது தற்போது காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- Advertisement -