- Advertisement -
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சில நாட்களுக்கு முன் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இந்த கைதை கண்டித்துக் கடந்த இரண்டு நாட்களாக ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகரும், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணா இன்று (செப் .22) காலை சட்டப்பேரவைக்கு வந்ததும், விசில் அடித்து அமளியில் ஈடுபட்டார். அதேசமயம், நேற்று சட்டப்பேரவையில் சபாநாயகரைச் சுற்றிவளைத்து கையை தொடையில் மீசையை முறுக்கியது குறிப்பிடத்தக்கது
- Advertisement -