- Advertisement -
வளிமண்டலத்தில் மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாகக் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், மெரினா, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செப்.21) காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக மக்கள் தெரிவித்தனர்.
அதேசமயம், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (சேவ் .21) பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். விடுமுறை இல்லை என அந்தத்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏனென்றால், வேலூரில் பெய்து வரும் மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்திலுள்ள 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
- Advertisement -