- Advertisement -
அல்சைமர் என்பது மூளையின் நரம்பு சம்பந்தமான ஞாபக மறதி நோய். மிகவும் பொதுவான நோயாக இது உள்ளது. அதேசமயம், இதை ஞாபக மறதி நோய் தானே என்று கடந்து செல்ல முடியாது. ஏனென்றால், வயதானவர்களின் மூளை செல்களை சிறிது சிறிதாகச் சிதைக்கும் தன்மை கொண்டது.
அதன்படி, இந்த அல்சைமர் நோயால் வயதானவர்கள் படிப்படியாக நினைவாற்றலை இழந்து, தங்களையும், சுற்றத்தாரையும் மறந்துவிடும் அளவுக்கு மோசமாகப் பாதிக்கும் ஞாபக மறதி நோய் தான் இந்த அல்சைமர் நோய். இந்நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் வருகின்ற செப்டம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- Advertisement -