- Advertisement -
சீனாவின் ஜியாங்சு மற்றும் யாசெங் நகரங்களில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றில், குடியிருப்புகள் இடிந்து விழுந்ததில் சுமார் 10 பேர் ஒரே நாளில் பலியாகினர். மேலும், இந்த சூறாவளிக் காற்றால் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், இந்த நகரங்களில் வீசிய சூறாவளிக் காற்றால் இடிந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜியாங்சு பகுதியில் சூறாவளி ஏற்படுவது வழக்கமானது என்றும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -