சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கணக்கில் திடீரென ரூ .9000 கோடி டெபாசிட் ஆனதாக வந்த மெசேஜால் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால், இவரது வங்கிக் கணக்கில் வெறும் 15 மட்டும் இருந்த நிலையில் யாரோ ஏமாற்றுவதாக நினைத்த அவர், ரூ . 21,000ஐ தனது நண்பர் கணக்குக்கு மாற்றி உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், இந்த பணம் பரிமாற்றம் நடந்ததைக் கண்டுபிடித்த வங்கி ஊழியர்கள், மீதமுள்ள பணம் அனைத்தையும் திரும்பப் பெற்று, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓட்டுநரிடம் ரூ .21,000ஐ திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்றும், அதை வாகன கடன் வழங்குகிறோம் எனக் கூறியுள்ளனர்
- Advertisement -