Saturday, April 13, 2024 6:09 pm

நடந்து கொண்டிருந்த போது கால் வழுக்கி சரிந்து விழுந்ததில் பிரபல நடிகர் திடீர் மரணம் ! அதிர்ச்சியில் திரையுலகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

3 இடியட்ஸ், டான் போன்ற பாலிவுட் படங்களில் நடித்ததற்காக அகில் மிஸ்ரா மிகவும் பிரபலமானவர், செப்டம்பர் 21 அன்று 58 வயதில் காலமானார். நடிகர் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது தரையில் தவறி விழுந்தார். அவரது திடீர் மறைவுக்கு அவரது மனைவியும் நடிகையுமான சுசானே பெர்னெர்ட்டும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதாவது இவர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், அமீர்கான், மாதவன், கரீனா கபூர் ஆகியோர் நடிப்பில் 2009 இல் வெளியான ‘3 இடியட்ஸ்’ என்ற படத்தில் கல்லூரி நூலகராக தூபே என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வெளியாகியத் திரைப்படம் 3 இடியட்ஸ். அமீர்கான், மாதவன், கரீனா கபூர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நைத்திருந்தார்கள். மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் கவணம் பெற்றது. அதிலும் குறிப்பாக கல்லூரி நூலகராக தூபே என்கிற அகில் மிஷ்ரா நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் தனித்த இடம் பிடித்தது. நகைச்சுவை கலந்த அப்பாவியான உடல்மொழியை தனது நடிப்பில் அகில் மிஷ்ரா வெளிப்படுதியது ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான பிரபல கார்ட்டூன் ஒன்றிலு வரும் ஆசிரியர் கதாபாத்திரத்திற்கும் துபே என்று பெயர் வைக்கும் அளவிற்கு அகில் மிஷ்ராவின் கதாபாத்திரம் புகழ்பெற்றது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நண்பன் என்கிறப் பெயரின் ஷங்கர் இந்தப் படத்தை ரீமேக் செய்தார். விஜய் ஜீவா, ஸ்ரீகாந்த் இலியானா எஸ்.ஜே சூரியா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். அகில் மிஷ்ரா நடித்த தூபே கதாபாத்திரத்தை போஸ் என்கிற கதாபாத்திரம் மறைந்த நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலா நடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இவர் தனது வீட்டில் சமயலறையில் வேலை செய்துகொண்டிருக்கின்றார். அப்போது எதிர்பாராத சமயத்தில் கால் நழுவி சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். நகைச்சுவை கலந்த அப்பாவியான உடல்மொழியை தனது நடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட இவரின் திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்குப் பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.

அகில் மிஸ்ரா 2009 இல் ஜெர்மன் நடிகை சுசான் பெர்னெட்டை மணந்தார் மற்றும் அவருடன் கிராம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான மேரா தில் தீவானாவில் பணியாற்றியுள்ளார். நடிகரே எழுதி இயக்கிய மஜ்னு கி ஜூலியட் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். கசௌதி ஜிந்தகி கே, சவ்தான் இந்தியா, ஏக் ஹஸாரோன் மே மேரி பெஹ்னா ஹை, சக்ரவர்தின் அசோகா சாம்ராட், யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை மற்றும் போரஸ் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரது மனைவி சுசான் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்