இந்தியாவில் மருத்துவ சம்மந்தப்பட்ட படிப்புகளுக்காக ஒன்றிய அரசு கொண்டுவந்த நீட் நுழைவுத் தேர்வால் பல மாணவர்களின் உயிரிழப்பையும் , அவர்களது மருத்துவ கனவையும் சிதைப்பதால் தமிழக அரசு இதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில், தற்போது நாட்டின் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால், நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் காரணமாக , காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த நீட் தேர்வால் மாணவர்களின் திறனை மேம்படுத்த முடியாது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பால் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.