காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தற்போது நாட்டின் பல பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு வருகிறார். அதன்படி இன்று (செப்.21) டெல்லியில் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர்களைப் போலவே சிவப்பு நிற சட்டை அணிந்து, பயணி ஒருவரின் சூட்கேஸை தலையில் தூக்கிச் சென்றார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- Advertisement -