- Advertisement -
இயக்குநர் அட்லீ இயக்கி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படம் தற்போது வசூல் வேட்டையாடி வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் ஷாருக்கானை முன்னாள் கிரிக்கெட் வீரர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சந்தித்தார்.
இந்நிலையில், இதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள கம்பீர், “ஷாருக்கான் பாலிவுட்டிற்கு மட்டும் ராஜா அல்ல, அனைவர் மனதிலும் அவர் ராஜாதான். நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், அளவற்ற அன்புடனும் மரியாதையுடனும் திரும்பிச் செல்கிறேன். உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றார்.
- Advertisement -