- Advertisement -
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் சர்வதேச உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என மேற்கத்திய நாடுகள் கவலைப்படுகின்றன.
இந்நிலையில், தற்போது கனடாவிலிருந்து இந்தியா வருவதற்கான ‘விசா’ சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு விசா சேவை மையங்களிடம் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், கனடாவிலிருந்து இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் கனடா – இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- Advertisement -