Thursday, December 7, 2023 9:36 am

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து கதாபாத்திர விஷயத்தில் இயக்குனர் எடுத்த அதிர்ச்சி முடிவு ! நேத்து எபிசோடில் இத கவனிச்சிக்கங்களா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் குணசேகரன் இல்லை என்பதால் கதையை எப்படி நகர்த்துகிறார்கள் என்பது சற்று குழப்பமாக இருப்பதை உணர முடிகிறது.

இன்றைய ப்ரோமோவில், ஜீவானந்தைப் பார்க்க ஈஸ்வரி தர்ஷனை அழைத்துச் செல்கிறார். ஜீவானந்தமும் ஈஸ்வரியும் பேசுகிறார்கள். வெண்பாவும் தர்சனிடம் பேசுகிறார். அவளின் கேள்வியால் தர்ஷன் அதிர்ச்சியடைவது போல் காட்டப்படுகிறார். இதனால் இன்றைய நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில், கரிகாலன் தனது வழக்கமான சச்சினிசத்தை வீட்டில் உள்ள பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்கிறார். எல்லோரும் அவரை ஏமாற்றுகிறார்கள்.ஆதிமுத்து குணசேகரன் கதாபாத்திரத்தில் வந்த மாரிமுத்துவின் இறப்பு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை உருவாக்கியது. ரசிகர்களும் இதனை சற்றும் எதிர்பாராது அதிர்ச்சியில் உறைந்தனர். ஒரு பக்கம் அவரது மரணம் அதிர்ச்சி என தொடர்ந்தாலும் மறுபக்கம் இந்த தொடரில் அவருக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு பக்கம் வேல ராமமூர்த்தி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு நிறைய பட கமிட் மெண்ட்ஸ் இருப்பதால் முடியாது என்று கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.இதே வேடத்தில் நடிக்க இளவரசு, ராதாரவி உட்பட பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது.

இதனிடையே குணசேகரன் இல்லாமல் சென்று கொண்டிருந்த சீரியல் தற்போது வேறொரு கோணத்தில் பயணிக்க இருக்கிறது. அண்ணனை இழந்துவிட்டு வாடும் குடும்பத்தில் இன்னொரு பிரச்னை ஆரம்பிக்க இருக்கிறது. அது இன்னொரு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இன்றைய புரமோ அந்த வகையில்தான் அமைந்திருக்கிறது.

இன்று வெளியாகி இருக்கும் புரமோவில், குணசேகரன் வீட்டை விட்டு சென்று விட்ட நிலையில், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பட்டம்மாள் வாசிக்கிறார். இதனைப் பார்த்த நந்தினி இந்த டிராமைத்தான் அடிக்கடி செய்கிறாரே என்று கூற, அதற்கு பட்டம்மாள் இந்த முறை குணசேகரன் வருவான். ஆனால் மிகவும் ஆபத்தான ஆளாக வரப்போகிறான் என்று சொல்கிறார்.

இதனிடையே ஜான்சி ராணியை குறிவைத்து விசாலாட்சியிடம், அத்தை கண்டதையும் கொண்டு வந்து நடு வீட்டில் வைக்கிறீர்கள் என்று சாடுகிறாள் நந்தினி. அதற்கு விசாலாட்சி கண்டவங்களோடு கூத்தடித்துதான் என்னுடைய புள்ளையை நான் தொலைத்து கொண்டு நிற்கிறேன் என்று பேச, நந்தினி அதிர்ச்சி அடைகிறாள்.” அத்துடன் இன்றைய புரமோ முடிகிறது.இந்நிலையில் யார் நடித்தாலும் எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய கதாபாத்திரத்தை நிறைவு செய்ய முடியாது என ரசிகர்கள் பலரும் கருத்துக்கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் குணசேகரன் கதாபாத்திரமே இல்லாமல் சீரியலை தொடர இயக்குனர் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.

அதற்கேற்றார் போல நேற்றைய எபிசோடில் லெட்டர் எழுதி விட்டு குணசேகரன் காணாமல் போக விசாலாட்சி ஒருவரை சந்தித்து ஓலைச்சுவடியை வைத்து குணசேகரன் குறித்து கேட்க அப்போது ஜோசியர் இவர் இரண்டாவது மகன் இவருக்கு ஒரு அண்ணன் இருப்பார். உண்மையா பொய்யா என கேட்க ஞானம் இவர் தான் பெரியவர் என்று சொல்ல ஜோசியர் இல்ல இவருக்கு ஒரு அண்ணன் இருப்பாரு அப்படித்தான் ஓலைச்சுவடி சொல்லுது என்று கேட்க விசாலாட்சி திருத்திருவன முழிக்கிறார்.

இதனால் மாரிமுத்து இடத்தை நிரப்ப வேறு ஒரு நடிகர் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அது ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இல்லை அவருடைய அண்ணன் கதாபாத்திரம் எனவும் இந்த காட்சிகளின் மூலம் தெரிய வருகிறது.இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் தான் இனி சீரியல் நகரும் என எதிர்பார்க்கலாம்.

குணசேகரனின் வீட்டில், கரிகாலன் மீண்டும் குட்டையைக் கலக்கத் தொடங்குகிறான். கரிகாலன் குணசேகரனிடம் நீங்கள் அவரை நம்பிக்கையான நபராக வைத்திருக்கிறீர்கள் என்று கூறுகிறார். ஏன்டா பொங்கல் என்று டியூசனுக்கு வந்த டீச்சரும் எனக்கும் நிறைய சந்தேகம் என்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்