கோவையில் பாஜக அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அண்ணாமலையிடம் அதிமுக – பாஜக கூட்டணி இருக்கா? இல்லையா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, பாஜக அண்ணாமலை அவர்கள், ” எனக்கும், அதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இதில் தெளிவாக உள்ளோம் . அதிமுகவில் சில தலைவர்களுக்கும் எனக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றால், இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. நான் யாரையும் எங்கையும் தவறாகப் பேசவில்லை. அதேசமயம் என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது.” என்றார்.
மேலும், அவர் ” ‘மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதை எப்படி ஏற்க முடியும்? மாநிலத்தில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வரவே நான் தலைவராக ஆகியுள்ளேன். நான் ஆக்ரோஷமாகத்தான் அரசியல் பண்ணுவேன், இது கட்சியினருக்கும் தெரியும்” எனப் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்
- Advertisement -