Thursday, December 7, 2023 9:42 am

பளார்னு கன்னத்துல ஒரு அறை கொடுத்துருக்கனும் : தொகுப்பாளினி ஐஸ்வர்யா ஆவேசம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகானின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சரக்கு’ திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு கூல் சுரேஷ் வலுக்கட்டாயமாக மாலை அணிவித்த சம்பவம் அந்த நிகழ்ச்சி விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இந்த மாலை அணிவித்த காணொளி இணையத்தில் வெளியாகி கூல் சுரேஷ் எதிராக கடும் விமர்சனம் எழுந்தது

இந்நிலையில், கூல் சுரேஷை பளார்ன்னு அடிக்காமல் விட்டது வருத்தமாக உள்ளதாக, சம்பந்தப்பட்ட பெண் தொகுப்பாளர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கூல் சுரேஷ் கன்னத்தில் அறைஞ்சிருக்கணும்: சிம்புவின் ஆரம்பகால படங்களில் அவருக்கு நண்பனாக நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். தற்போது நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால், சினிமா ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டும் இல்லாமல், முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது, திரையரங்கிற்கு குதிரையில் சென்று அலப்பறை செய்வதே இவரது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், மன்சூர் அலிகான் நடித்துள்ள சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கூல் சுரேஷ், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளருக்கு திடீரென மாலை போட்டு வாழ்த்துத் தெரிவித்தார். “எல்லாருக்கும் மாலை போட்டீங்க, ஆனா நமக்காக அழகாக பேசி நிகழ்ச்சியை நடத்தும் இவங்கள மறந்துட்டீங்களே” எனக் கூறி மாலை போட்டது சர்ச்சையானது.

இதனை சற்றும் எதிர்பாராத பெண் தொகுப்பாளர் ஐஸ்வர்யா, மேடையிலேயே மாலையை கழட்டி வீசி எறிந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான், கூல் சுரேஷுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர் சார்பாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும் மன்னிப்புக் கேட்டும் வீடியோ வெளியிட்டார் கூல் சுரேஷ்.

“என்னால் நடித்து பெரியா ஆளா வர முடியலை. அதனால ஏதோ கிறுக்குத்தனமா சில வேலைகளை செஞ்சு பிழைப்பை ஓட்டிட்டிருக்கேன். நான் பண்றது எல்லாமே ஃபன்னுக்குதான். அப்படி விளையாட்டா செஞ்சதுதான் இப்படி மாலை போட்டதும். ஆனா ஒரு பெண்ணின் மனதை காயப்படுத்திட்டேன் நினைக்கிறப்ப உண்மையாவே வருத்தப்படுறேன். உண்மையாவே நான் பண்ணது மிகப் பெரிய தவறுதான். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறுகள் செய்யமாட்டேன்” என பேசியிருந்தார்.

இதுகுறித்து சரக்கு இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ”அந்த சம்பவத்தை நினைச்சா இன்னும் அதிர்ச்சியா இருக்கு. அதுவும் என் தோள்பட்டையைப் பலவந்தமா அழுத்தி, யாரும் எதிர்பார்க்காத நொடியில அப்படி நடந்துக்கிட்டார். ஒருத்தர் பொதுமேடையில திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்னங்க செய்ய முடியும்? நாம ஏன் பளார்னு அந்தாளு கன்னத்துல ஒரு அடியாவது கொடுக்காம விட்டுட்டோம்னு இப்ப நினைக்கிறேன்.”

“கிறுக்குத்தனம் பண்றதுல கூட சில எல்லைகள் இருக்கு. தனிப்பட்ட யாரையும் அது பாதிக்காதபடி இருக்கணும். இதுக்கு முன்பும் ஒரு நிகழ்ச்சியில என்னிடம் வம்பு பண்ணியிருக்கார் கூல் சுரேஷ். பொதுவா அவரோட நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காதுங்கிறது தான் நிஜம். அதனால இவரை மேடைக்குக் கூப்பிடறப்ப வெறுமனே நடிகர் கூல் சுரேஷ்னு கூப்பிடுவேன். ஆனால், அப்படிக் கூப்பிடக் கூடாது; எனக்கு ‘யூ டியூப் சூப்பர் ஸ்டார்’னு பட்டம் இருக்கு, அதைச் சொல்லி கூப்பிட மாட்டீங்களா’ன்னு சொல்லிருக்கார்.”

“அதனால் தான் இந்தமுறை மாலையை வேணும்னே என் கழுத்தில் போட்டிருப்பார்னு தோணுது. இன்னொருமுறை இந்த மாதிரி நடந்துகிட்டா கன்னத்துல ஒரு அடியாவது கொடுத்திடுவேன், இல்லாவிட்டால் போலீஸில் புகார் கொடுக்கலாம்ன்னு இருப்பதாக” ஐஸ்வர்யா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா, “பொதுமேடையில் திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்ன செய்ய முடியும்? நாம ஏன் பளார்னு அந்தாளு கன்னத்துல ஒரு அறை கொடுக்காம விட்டுட்டோம்னு இப்ப நினைக்கிறேன்” என ஓபனாக தனது கருத்தைத் தெரிவித்தார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்