- Advertisement -
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அண்மையில் கனடா பிரதமர் தெரிவித்து இந்தியத் தூதரக தலைவரை வெளியேற்றினார். இந்த கொலைக்கு மறுப்பு தெரிவித்த இந்திய அரசு கனடாவுக்குப் பதிலடி தரும் விதமாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக தலைவரை வெளியேற்றினர்.
இந்நிலையில், தற்போது கனடாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ” இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும், இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்குப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தியது.
- Advertisement -