- Advertisement -
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் பிரசாரத்தின் போது, திமுக கட்சி ஆட்சி வந்தவுடன் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதையடுத்து, தற்போது திமுக ஆட்சி கைப்பற்றி வெற்றிகரமாக 3வது ஆண்டு நடந்து வருகிறது. இந்நிலையில், தேர்தலின் போது அறிவித்த மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்குக் கடந்த முதல் விண்ணப்பம் விநியோகப்பட்டு தற்போது சுமார் 1.06 கோடி பேருக்கு 1000 வழங்கப்பட்டு இருக்கிறது.
அதேசமயம், சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அப்படி நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் அரசு மேற்கொண்டுள்ள உதவி மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் இ-சேவை மையங்களில் செயல்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆகவே, இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
- Advertisement -