நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 16. சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீரா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செய்திகளின்படி, அவர் அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவரது மகள் மீரா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எனக் கூறப்படும் நிலையில், தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மீரா, சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை வேளையில் தூக்கிட்ட நிலையில் லாரா மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மன அழுத்தம் காரணமாக தற்கொலை என கூறப்படுகிறதுசென்னை, டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை
விஜய் ஆண்டனி ஒரு பிரபலமான இசையமைப்பாளர், முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார். பல வருடங்கள் இசையமைப்பாளராக இருந்த அவர், தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், எடிட்டர், ஆடியோ பொறியாளர் மற்றும் இயக்குனராகவும் மாறினார்.
அவர் பாத்திமா விஜய் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார், அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் கவனித்து வருகிறார். விஜய்க்கும் பாத்திமாவுக்கும் மீரா, லாரா என்ற இரு மகள்கள் உள்ளனர்.