- Advertisement -
அமெரிக்காவின் வையோமிங் மாகாணத்தில் சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘கேம்டோசாரஸ்’ இன டைனோசரின் எலும்புக்கூடு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது 7 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்நிலையில், இந்த டைனோசரின் எலும்புக்கூடு பாரிஸில் அடுத்த மாதம் ஏலம் போக உள்ளது. இதை ஏலம் எடுக்கப் பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில், ரூ.11 கோடி வரை இது விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -