- Advertisement -
சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உதவி மையங்கள் தமிழக அரசு அறிவித்தபடி இன்று காலை 10 மணி முதல் செயல்படத் தொடங்கியது. அதன்படி,இந்த சென்னை மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதைப்போல் பிற மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது
மேலும், இந்த மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, மீண்டும் விண்ணப்பங்கள் பதிவு செய்வது, ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கிக் கணக்குக்கு உரிமைத் தொகை வராமல் இருப்பது உட்பட எந்த சந்தேகங்கள் குறைகள் இருந்தாலும் பொதுமக்கள் இந்த உதவி மையத்தை அணுகித் தீர்வு காணலாம் எனவும், நிராகரிப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட பின், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -