- Advertisement -
நாமக்கல்லில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சு உத்தரவிட்டுள்ளார். ஓட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா, கெட்டுப்போன பழைய சிக்கன், மட்டன் பயன்படுத்தப்படுகிறதா? உணவில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட துரித உணவகத்திற்கு சிக்கன் சப்ளை செய்த கோழிக் கடை உரிமையாளர் சீனிவாசனை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ், இந்த விவகாரத்தில் கைது செய்த நபரை 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக சற்றுமுன் தெரிவித்தனர்
- Advertisement -