- Advertisement -
தமிழ்நாட்டில் இன்று (செப்.19) முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்கத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் 6 மாதக் குழந்தை முதல் 5 வயதுக் குழந்தை வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த சொட்டு மருந்து இன்று முதல் வருகின்ற செப். 25ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே பெற்றோர் அனைவரும் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
- Advertisement -