- Advertisement -
தமிழகத்தில் இனி வரவிருக்க வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், “சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன” என்றார்.
மேலும், அவர் ” இங்கு மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரிய பணிகள், மெட்ரோ இரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாகப் பழைய சாலைகள் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது ஏற்புடையதல்ல. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இது அறிவுரை மட்டுமல்ல; அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்” என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்டுள்ளார்
- Advertisement -