- Advertisement -
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலத்தைக் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதியன்று இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் புவியின் சுற்றுப்பாதையில் இந்த ஆதித்யா எல்1 விண்கலம் சுற்றி வந்தது. பின்னர், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த விண்கலம் சுற்றும் புவியின் சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்தது.
இந்நிலையில், தற்போது புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து பிரிந்து சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எல்1-ஐ நோக்கி ஆதித்யா விண்கலம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளதாக சற்றுமுன் இஸ்ரோ தகவல் அளித்துள்ளது. அதேசமயம், இந்த ஆதித்யா எல்1 விண்கலம் 110 நாட்களில் எல்1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடையும் எனத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -