- Advertisement -
இந்தாண்டு நடக்க இருக்கும் 72வது ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி நவம்பர் மாதம் எல் சால்வடார் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தான் அழகி எரிகா ராபின் (24) கலந்து கொள்ள உள்ளார். பாகிஸ்தான் நாட்டிலிருந்து ஒருவர் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், அவருக்குப் பல தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிகின்றன. ஆனால், அதேசமயம் இதற்குப் பாகிஸ்தான் மத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -