- Advertisement -
தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ .1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முறைப்படி (செப். 15) காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க விழா, அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து, அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, சிலரது வங்கிக் கணக்கில் நேற்று (செப் .14) முதலே ரூ.1000 செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
- Advertisement -