- Advertisement -
வரலட்சுமி பூஜையின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம் தான் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னால் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்கள் கையால் கோலம் போட்டு வரலட்சுமியை அழைக்க வேண்டும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும், வியாழக்கிழமை மாலையே வீடுகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும், இந்த வரலட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்குக் கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். மஞ்சள், குங்குமம், பூ வைத்து முடி, கயிறு வைத்துப் பூஜிக்கலாம்
- Advertisement -