- Advertisement -
தமிழ்நாட்டில் அடுத்த நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, கரூர், திருச்சி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் மாலை 4 மணி வரையிலும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
அதேசமயம், இலங்கை கடலோரம், தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
- Advertisement -