- Advertisement -
கேரளாவைச் சேர்ந்த சிந்து என்பவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். ஆனால், நேற்று (செப். 14) திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று (செப். 15) காலை இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்படிக் காய்ச்சலால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- Advertisement -