- Advertisement -
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து நேற்று (செப்.14) மும்பைக்குத் தனியார் விமானம் ஒன்று சென்றது. இந்நிலையில், இது மும்பை சென்று தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று பெரும் விபத்திற்குள்ளானது.
ஏனென்றால், அங்குக் கனமழை காரணமாக ஓடுபாதை சரியாகத் தெரியாததே இந்த விபத்துக்குக் காரணம் என இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதில் 6 பயணிகள், 2 விமான குழுவினர், விமானத்திலிருந்த நிலையில் இந்த விபத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனகரம் கூறியுள்ளது.
- Advertisement -