- Advertisement -
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்று (செப்.15) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் ஆட்சியர் பழனி மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “இத்திட்டத்தின் கீழ் பலருக்குக் குறுஞ்செய்தி வந்ததைத்தொடர்ந்து அவர்களிடம் OTP கேட்டு சிலர் தொடர்பு கொண்டுள்ளனர் என மக்களிடம் புகார் வந்தது” என்றார்.
மேலும், அவர் ” இவ்வாறு எந்த நடைமுறையும் இல்லை. இது பணம் பறிக்கும் வேலை என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
- Advertisement -